OMMENTS
ஐரோப்பா கண்டத்தின் வட மேற்கில் 'அயர்லாந்து தீவு' அமைந்திருக்கிறது. இது அந்த கண்டத்தின் மூன்றாவது பெரியத்தீவு. எழுநூறு ஆண்டுகளாக பிரித்தானிய(British) ஆட்சியின் கீழ் இருந்தது. அதன் சுதந்திரப்போராட்டம் 1798-லிருந்தே துவங்கி விட்டாலும். அதன் கடைசிக்கட்ட போராட்டம் என்பது 1916ல் ஈஸ்டர் நாளின் துவங்கப்பட்ட "Easter Rising" போராட்டத்திலிருந்து துவங்குகிறது. அது 'Irish Republican Brotherhood' என்ற இயக்கத்தினால் ஆயுதப் போராட்டமாக முன்னெடுக்கப்பட்டது.....
VIJAY ARMSTRONG............
இந்தப்போராட்டத்தில் 'மைக்கேல் காலிச்ஸின்' மிக முக்கிய பங்காற்றினார். அதன் தோல்விக்குப் பிறகு 1917-இல் 'Sinn Fein' என்ற கட்சி தோற்றுவிக்கப்பட்டது. 'எமோன் தேவ் வலிரா' அதன் தலைவர். காலின்ஸ் 'கொரில்லா போர்' முறையைக் கொண்டு தன் போராட்டத்தை நடத்த துவங்கினார். இவரின் 'கொரில்லா போர்' முறைகள் பிற்காலத்தில் பல நாட்டு போராட்டத்தில் பின்பற்றப்பட்டன. சீனாவில் 'மாவோ', இஸ்ரேலில் 'இட்சாக் ஷமிர்'(Yitzhak Shamir) போன்றவர்களால் பின்பற்றப்பட்டது. மைக்கேல் காலின்ஸ் ஒரு சிறு குழுவைக்கொண்டே தன் போராட்டத்தை நடத்தினார். விருப்பட்டு வந்த இளம் ஏழை தொழிலாளிகளைக் கொண்டது அவரின் இராணுவம்.
பிரித்தானிய உளவாளிகளாலே தங்களின் போராட்டம் சிதைக்கப்படுகிறது என கோபம் கொண்ட காலின்ஸ் அவர்களின் மீது போர்ப் பிரகடணம் செய்தார். 12 பேர் கொண்ட தன் இளம் படையைக் கொண்டு(IRA) அவர்களை கொன்றார். அது ஒரு ஞாயிற்றுக்கிழமை, பதினாங்கு பிரித்தானியர்கள் கொல்லப்பட்டார்கள். இதற்கு பழிவாங்க பிரித்தானியஇராணுவம் 'Croke Park' நடந்த கால்பந்தாட்ட விளையாட்டின் போது துப்பாக்கிச்சூடு நடத்தியது, இதில் விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் என 14 பேர் கொல்லப்பட்டார்கள். சிறையில் இருந்த மூன்று போராட்டக்கைதிகளும் கொல்லப்பட்டார்கள். முப்பத்தியோறு நபர்களை பலி கொண்ட அந்த ஞாயிறுவை சரித்திரம் 'இரத்த ஞாயிறு' என பதிவுசெய்து வைத்திருக்கிறது. இது நடந்தது அயர்லாந்தின் தலைநகர் 'டுப்புலினில்'(Dublin)1920 நவம்பர் மாதம் 21 நாள்.
போராட்டம், பேச்சுவார்த்தை உடன்படிக்கை என நாடு இரண்டாக பிரிக்கப்பட்டு உள்நாட்டு யுத்தம் நடந்தது. 'மைக்கேல் காலின்ஸ்' என்ற சிறந்த தலைவனை அந்த தேசமே சுட்டுக்கொன்றது. 'Irish Free State' என அழைக்கப்பட்ட பகுதி 1922-இலிருந்து பிரித்தானிய ஆதிக்கத்திற்கு உட்பட்ட அயர்லாந்து பாராளும் மன்றம் என்ற இரட்டை ஆட்சி முறையில் இருந்தது. 1937 பிறகு அயர்லாந்து என்ற சுதந்திர நாடாக உறுவாகியது.
பிரித்தானிய ஆட்சிக்கு உட்பட்ட வட அயர்லாந்தில் 'Protestant' கிருத்துவர்கள் அதிகம். கத்தோலிக்கியர்கள் சிறுபான்மையர்கள். இருப்பிரிவனர்களிடையே அரசியல் உரிமைச்சார்ந்து முரண்பாடுகள் இருக்கிறது. 1960-70-களில் 'Northern Ireland Civil Rights Association' என்ற இயக்கம் சிறுபான்மையனர்களான 'கத்தோலிக்க கிருத்துவர்களின்' உரிமைக்காக போராடி வந்தது. இந்த இயக்கம் 1972 சனவரி 30இல் ஒரு 'பொது எதிர்ப்பு ஊர்வலத்தை' ஏற்பாடு செய்தது. இதில் பல்லாயிரக்கனக்கான மக்கள் கலந்துக்கொண்டார்கள். இந்த ஊர்வலத்தை தடுக்க இராணுவம் தயார் நிலையில் நிறுத்தப்பட்டது. இதில் கலவரம் வெடிக்கும் அதை தடுக்க இந்த ஏற்பாடு என சொல்லப்பட்டது.
நேரம் ஆக ஆக மக்களின் எண்ணிக்கை அதிகரித்தது. கூட்டம் மெதுவாக குறிப்பிட்ட பாதையில் முன்னேறியது. இராணுவம் தனக்குத்தேவையான சிறு சலசலப்புக்காக காத்திருந்தது. எதிர்பாத்தப்படி இளம்வட்டங்களின் கூச்சல், ஆர்பாட்டம் அதிரிகரித்தது. இதுதான் காரணம் என்று இராணுவம் செயலில் இறங்கியது. ஆர்பாட்டக்காரர்கள் ஆயுதங்கள் வைத்திருந்தார்கள், அது தங்களை நோக்கி பிரயோகிக்கப்பட்டது என்று காரணம் காட்டி 'இருபத்தியாறு ஊர்வலக்காரர்களை' இராணுவம் சுட்டுக்கொன்றது. இந்த 'படுகொலைகள்' நடந்ததும் ஒரு ஞாயிற்றுக்கிழமைதான். சரித்திரம் இந்த நாளையும் 'இரத்த ஞாயிறு' என்றுதான் குறித்து வைத்திருக்கிறது.
1972-யில் நடந்த இரண்டாவது 'இரத்த ஞாயிறு' நாளில் நடந்த சம்பவங்களை 'இரத்த ஞாயிறு'(Bloody Sunday) என்றப்படம் நம் கண்முன்னே கொண்டுவருகிறது. இந்தப்படம் சம்பவம் நடந்த இடத்திலேயே படமாக்கப்பட்டது. ஏறக்குறைய எல்லா சம்பவங்களும் உண்மையில் நடந்ததைப்போலவே மறுஉருவாக்கம் செய்யப்பட்டு படமாக்கப்பட்டது. ஒரு பரபரப்பான கலவரத்துக்குள் மாட்டிக்கொண்ட உணர்வை இந்தப்படம் நமக்குத்தருகிறது.
'மைக்கேல் காலின்ஸின்' வாழ்க்கையை 'மைக்கேல் காலின்ஸ்' என்னும் படம் விவரிக்கிறது. வழிநடத்தும் தலைவன், அவன் முடிவுகளிலில் இருக்கும் உறுதி, தெளிவு, பிடிவாதம் என ஒரு தேர்ந்தத்தலைவனின் எல்லா குணாம்சங்களையும் இந்தப்படத்தின் மூலம் நாம் காணமுடிகிறது. 1920இல் நடந்த 'இரத்த ஞாயிறு' சம்பவங்கள் இந்த படத்தில் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.
ஆயுதப்போராட்டமோ அல்லது அரசியல் போராட்டமோ இரண்டையும், ஆளும் வர்க்கம் தடுக்கும் நசுக்கும் என்பதை இந்த இரண்டு 'அயர்லாந்து அரசியல்' படங்கள் நமக்கு சொல்லுகின்றன.
'மைக்கேல் காலின்ஸ்' திரைப்படத்தில் 'மைக்கேல் காலின்ஸ்'-இன் மறைவுக்குப் பின்னர் அவரைப்பற்றி அவரின் நண்பர் 'ஜோ' குறிப்பிடும்போது இப்படி குறிப்பிடுகிறார், "சில மனிதர்கள் காலயோட்டத்தில் தேவைப்படுகிறார்கள், அவர்கள் இல்லாமல் வாழ்க்கை சாத்தியப்படுவதில்லை"

இப்படி காலயோட்ட சக்கரத்தில் 'தனக்கானிடத்தில்' சரியாக பொருந்தி, வாழ்க்கையை நகர்த்தி வைத்துவிட்டுபோன பல மனிதர்கள்,தலைவர்கள் உண்டு. அவர்கள் இல்லாமல் அந்த சக்கரம் நகர்ந்திருக்குமா என்பது சந்தேகம்தான்.
சில சமயம் வாழ்க்கை அப்படிப்பட்ட மனிதர்களை தேடிப்பிடிக்கிறது. சூழல் அதை தீர்மானிக்கிறது. சில சமயங்களில் மனிதர்கள்,மாமனிதர்கள் அப்படிப்பட்ட சூழலை உருவாக்குகிறார்கள். அவர்கள் வாழ்க்கையை தேடிப்பிடிக்கிறார்கள். அது அவர்களுக்கானது மட்டும்மல்ல. தன்னோடும் தனக்குபின்னாலும் வருபவர்களுக்குமானது அது.
இந்தப்போராட்டத்தில் 'மைக்கேல் காலிச்ஸின்' மிக முக்கிய பங்காற்றினார். அதன் தோல்விக்குப் பிறகு 1917-இல் 'Sinn Fein' என்ற கட்சி தோற்றுவிக்கப்பட்டது. 'எமோன் தேவ் வலிரா' அதன் தலைவர். காலின்ஸ் 'கொரில்லா போர்' முறையைக் கொண்டு தன் போராட்டத்தை நடத்த துவங்கினார். இவரின் 'கொரில்லா போர்' முறைகள் பிற்காலத்தில் பல நாட்டு போராட்டத்தில் பின்பற்றப்பட்டன. சீனாவில் 'மாவோ', இஸ்ரேலில் 'இட்சாக் ஷமிர்'(Yitzhak Shamir) போன்றவர்களால் பின்பற்றப்பட்டது. மைக்கேல் காலின்ஸ் ஒரு சிறு குழுவைக்கொண்டே தன் போராட்டத்தை நடத்தினார். விருப்பட்டு வந்த இளம் ஏழை தொழிலாளிகளைக் கொண்டது அவரின் இராணுவம்.
பிரித்தானிய உளவாளிகளாலே தங்களின் போராட்டம் சிதைக்கப்படுகிறது என கோபம் கொண்ட காலின்ஸ் அவர்களின் மீது போர்ப் பிரகடணம் செய்தார். 12 பேர் கொண்ட தன் இளம் படையைக் கொண்டு(IRA) அவர்களை கொன்றார். அது ஒரு ஞாயிற்றுக்கிழமை, பதினாங்கு பிரித்தானியர்கள் கொல்லப்பட்டார்கள். இதற்கு பழிவாங்க பிரித்தானியஇராணுவம் 'Croke Park' நடந்த கால்பந்தாட்ட விளையாட்டின் போது துப்பாக்கிச்சூடு நடத்தியது, இதில் விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் என 14 பேர் கொல்லப்பட்டார்கள். சிறையில் இருந்த மூன்று போராட்டக்கைதிகளும் கொல்லப்பட்டார்கள். முப்பத்தியோறு நபர்களை பலி கொண்ட அந்த ஞாயிறுவை சரித்திரம் 'இரத்த ஞாயிறு' என பதிவுசெய்து வைத்திருக்கிறது. இது நடந்தது அயர்லாந்தின் தலைநகர் 'டுப்புலினில்'(Dublin)1920 நவம்பர் மாதம் 21 நாள்.
![]() |
| Dublin-1920 |
1972-யில் நடந்த இரண்டாவது 'இரத்த ஞாயிறு' நாளில் நடந்த சம்பவங்களை 'இரத்த ஞாயிறு'(Bloody Sunday) என்றப்படம் நம் கண்முன்னே கொண்டுவருகிறது. இந்தப்படம் சம்பவம் நடந்த இடத்திலேயே படமாக்கப்பட்டது. ஏறக்குறைய எல்லா சம்பவங்களும் உண்மையில் நடந்ததைப்போலவே மறுஉருவாக்கம் செய்யப்பட்டு படமாக்கப்பட்டது. ஒரு பரபரப்பான கலவரத்துக்குள் மாட்டிக்கொண்ட உணர்வை இந்தப்படம் நமக்குத்தருகிறது.
'மைக்கேல் காலின்ஸின்' வாழ்க்கையை 'மைக்கேல் காலின்ஸ்' என்னும் படம் விவரிக்கிறது. வழிநடத்தும் தலைவன், அவன் முடிவுகளிலில் இருக்கும் உறுதி, தெளிவு, பிடிவாதம் என ஒரு தேர்ந்தத்தலைவனின் எல்லா குணாம்சங்களையும் இந்தப்படத்தின் மூலம் நாம் காணமுடிகிறது. 1920இல் நடந்த 'இரத்த ஞாயிறு' சம்பவங்கள் இந்த படத்தில் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.
ஆயுதப்போராட்டமோ அல்லது அரசியல் போராட்டமோ இரண்டையும், ஆளும் வர்க்கம் தடுக்கும் நசுக்கும் என்பதை இந்த இரண்டு 'அயர்லாந்து அரசியல்' படங்கள் நமக்கு சொல்லுகின்றன.
'மைக்கேல் காலின்ஸ்' திரைப்படத்தில் 'மைக்கேல் காலின்ஸ்'-இன் மறைவுக்குப் பின்னர் அவரைப்பற்றி அவரின் நண்பர் 'ஜோ' குறிப்பிடும்போது இப்படி குறிப்பிடுகிறார், "சில மனிதர்கள் காலயோட்டத்தில் தேவைப்படுகிறார்கள், அவர்கள் இல்லாமல் வாழ்க்கை சாத்தியப்படுவதில்லை"

இப்படி காலயோட்ட சக்கரத்தில் 'தனக்கானிடத்தில்' சரியாக பொருந்தி, வாழ்க்கையை நகர்த்தி வைத்துவிட்டுபோன பல மனிதர்கள்,தலைவர்கள் உண்டு. அவர்கள் இல்லாமல் அந்த சக்கரம் நகர்ந்திருக்குமா என்பது சந்தேகம்தான்.
சில சமயம் வாழ்க்கை அப்படிப்பட்ட மனிதர்களை தேடிப்பிடிக்கிறது. சூழல் அதை தீர்மானிக்கிறது. சில சமயங்களில் மனிதர்கள்,மாமனிதர்கள் அப்படிப்பட்ட சூழலை உருவாக்குகிறார்கள். அவர்கள் வாழ்க்கையை தேடிப்பிடிக்கிறார்கள். அது அவர்களுக்கானது மட்டும்மல்ல. தன்னோடும் தனக்குபின்னாலும் வருபவர்களுக்குமானது அது.

No comments:
Post a Comment